UPDATED : மார் 29, 2024 12:00 AM
ADDED : மார் 29, 2024 10:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 6 முதல், 8 ம் வகுப்பு வரை படிக்கும், 370 மாணவ, மாணவியருக்கு, இம்மாதத்தில் நான்கு நாட்கள், யோகா பயிற்சியாளர் அருள் என்பவர், சூரிய நமஸ்காரம், பிராணாயாமம், முத்ரா, ஆசனங்கள், தியானம், கிரியா போன்ற பல்வேறு பயிற்சிகளை இலவசமாக கற்று கொடுத்தார். அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ், யோகா ஆசிரியர் அருளை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

