UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 09:02 AM

சென்னை:
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ் தேர்வில் 18வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சேவாபாரதி தமிழ்நாடு மற்றும் பி.எல்.ராஜ் ஐ.ஏ.எஸ்., அகாடமி இணைந்து நடத்தும் பாரதி பயிலகம் தொழிலாளர் நலத்துறையின் உதவி தொழிலாளர் ஆணையருக்கான 29 பணியிடங்களை கொண்ட இந்திய ஆட்சி பணிக்கு நிகரான தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மு. இராமநாதன். இவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். இந்திய அளவில் 18வது தர வரிசையில் தேர்ச்சி பெற்றுள்ளார். மு. இராமநாதன், சென்னை அண்ணா நகரில் உள்ள பி.எல்.ராஜ் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அகாடமி மற்றும் பாரதி பயிலகம் நடத்தும் இலவச பயிற்சி மையத்தில் தயாரானவர்.
தமிழ்நாட்டில் இருந்து இப்பணிக்கு தேர்வாகியுள்ள ஒரே மாணவர் இவரின் பெற்றோர் சு.முருகையா, மு.லெட்சுமி இருவரும் கூலித்தொழிலாளர்கள். ராமநாதன் தனது பள்ளி கல்வியினை தமிழ் வழியில் பயின்றவர். மேலும் உணவத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டே கல்லூரி படிப்பை முடித்தார். தற்போது இந்திய ரயில்வேயின் உற்பத்தி கேந்திரமான சென்னை ஐசிஎப்-ல் பணியாற்றி வருகிறார்.