தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செவிலியர் கல்லுாரியில் விளக்கேற்றும் விழா

செவிலியர் கல்லுாரியில் விளக்கேற்றும் விழா

செவிலியர் கல்லுாரியில் விளக்கேற்றும் விழா


UPDATED : பிப் 10, 2026 12:53 PM

ADDED : பிப் 10, 2026 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2026 12:53 PM ADDED : பிப் 10, 2026 12:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
சரவணம்பட்டி, பி.பி.ஜி., செவிலியர் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெல்ஜியம் நாட்டின் நேட்டோ மருத்துவப் பிரிவின் சுகாதார நிபுணர் சுகன்யா பிரபா பேசுகையில், “செவிலியர் துறைக்கு உலகளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் தங்களின் தனித்திறன்களை வளர்த்துக் கொண்டு, உலகத்தரம் வாய்ந்த சேவையை வழங்கத் தயாராக இருக்க வேண்டும்,” என்றார்.

100 பட்டப்படிப்பு மற்றும் 19 பட்டயப்படிப்பு மாணவர்களும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, செவிலியர் துறையின் முன்னோடியான புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூர்ந்து செவிலியர் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

கல்லுாரியின் தாளாளர் சாந்தி, துணைத் தலைவர் அக்சய், முதல்வர் லிங்கராஜ் சித்ரா, துணை முதல்வர் கலைவாணி, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us