UPDATED : ஜன 08, 2026 03:43 PM
ADDED : ஜன 08, 2026 03:44 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலை கல்லூரியில், கல்லூரி மாணவ மாணவியர் 766 பேருக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் தலைமை வகித்து மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் 4522 மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, உதவி திட்ட அலுவலர் அருள்மொழி தேவன், பர்கூர் டவுன் பஞ்ச் தலைவர் சந்தோஷ் குமார், பர்கூர் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் காயத்ரி தேவி கல்லூரி மாணவ மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர்களுக்கு, அரசின் விலையில்லா, 'லேப்டாப்' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். ஓசூர், தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தில், ஓசூர், தேன்கனிக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.,க்கள் மற்றும் தளி அரசு கலை, அறிவியல் கல்லூரி, கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் 649 மாணவ மாணவியருக்கு, விலையில்லா 'லேப்டாப்'களை வழங்கினர்.
ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார தலைவர் மாதேஸ்வரன் வரிவிதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர் பங்கேற்றனர். கணினி அறிவியல் துணைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார் தமிழ் துணை தலைவர் பாத்திமாகனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

