கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கல்லுாரி முதல்வர் தகவல்
கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கல்லுாரி முதல்வர் தகவல்
UPDATED : மே 12, 2026 06:23 PM
ADDED : மே 12, 2026 06:25 PM
பொள்ளாச்சி:
'பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கலாம்,' என கல்லூரி முதல்வர் சுமதி தெரிவித்தார்.
பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில், ஷிப்ட் 1ல், பி.ஏ., ஆங்கிலம், (60), பி.எஸ்.ஸி., கணிதவியல் (60), பி.பி.ஏ., 60, பி.காம்., சி.ஏ., (60), பி.காம்., பி.ஏ., (60), ஷிப்ட் 2ல், பி.எஸ்.ஸி., கணினி அறிவியல் (50), பி.காம்., வணிகவியல் (70) இடங்களும் உள்ளன. இந்த பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சுமதி அறிக்கை வருமாறு:
பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் உதவி மையம் செயல்படுகிறது. மாணவர் சேர்க்கைக்காக இந்த மையம் அமைக்கப்பட்டு, பேராசிரியர் செந்தில்நாயகி ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார்.
மேலும், helpdeskgascpollachi@gmail.com என்ற இணையதளத்திலும் உதவிகளை பெறலாம். 04259 - 220335 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டறியலாம்.
நடப்பாண்டு சேர விரும்பும் மாணவ, மாணவியர், www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வரும், 29ம் தேதி வரை விண்ணப்பங்கள், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாற்று சான்றிதழ், தற்காலிக அல்லது நிரந்தர மதிப்பெண் பட்டியல், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஜாதி சான்றிதழ், சிறப்பு சான்றிதழ் (விளையாட்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள்), ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பதிவிறக்கம் செய்யப்பட்ட வருமான சான்றிதழ்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேலும், முதல் பட்டதாரி சான்றிதழ் இருப்பின் அதையும் இணைத்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
