தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளுக்கு நிதி கோரி வழக்கு

பள்ளிகளுக்கு நிதி கோரி வழக்கு

பள்ளிகளுக்கு நிதி கோரி வழக்கு


UPDATED : ஏப் 20, 2026 10:38 PM

ADDED : ஏப் 20, 2026 10:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2026 10:38 PM ADDED : ஏப் 20, 2026 10:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை முத்துசெல்வம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:


தமிழக ஹரிஜன் சேவக் சங்கத்தின் கீழ் மதுரையில் என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உண்டு உறைவிட பள்ளி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் உண்டு உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றிற்கு சில ஆண்டுகளாக மத்திய அரசு மானிய உதவி வழங்கவில்லை. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் போதிய நிதி வழங்கினால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

மாணவர்களின் இடைநிற்றல் குறையும். இரு பள்ளிகளுக்கும் நிதி உதவி வழங்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார்.

நீதிபதிகள் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை முதன்மை செயலர், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜூன் 2க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us