UPDATED : பிப் 05, 2025 12:00 AM
ADDED : பிப் 05, 2025 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்:
கப்பலுார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் 30 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு ஆண்டுக்கு 11 மாதம் மட்டுமே ஊதியம் வழங்குவதாகவும், 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நீதிமன்றம் உத்தரவின்படி பல்கலை மானிய குழு பரிந்துரைத்த மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.