தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ தேனீ வளர்க்க அழைக்கிறது பல்கலை

தேனீ வளர்க்க அழைக்கிறது பல்கலை

தேனீ வளர்க்க அழைக்கிறது பல்கலை


UPDATED : பிப் 05, 2025 12:00 AM

ADDED : பிப் 05, 2025 08:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2025 12:00 AM ADDED : பிப் 05, 2025 08:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
கோவை, வேளாண் பல்கலை, பூச்சியியல் துறை சார்பில், தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வரும் 6ம் தேதி அளிக்கப்படும் ஒரு நாள் பயிற்சியில், தேனீ இனங்களை கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை வாயிலாக மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி நாளில், வேளாண் பல்கலை பூச்சியியல் துறைக்கு காலை 9:00 மணிக்கு வர வேண்டும். அடையாளச் சான்று சமர்ப்பித்து, பயிற்சிக் கட்டணமாக வரிகள் உட்பட ரூ.590 செலுத்த வேண்டும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நேரம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

மேலும் விவரங்களுக்கு, 0422-6611214 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us