sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாநில அரசின் கட்டுப்பாட்டில் பல்கலை வரும் வரை சட்ட போராட்டம்: ஸ்டாலின்

/

மாநில அரசின் கட்டுப்பாட்டில் பல்கலை வரும் வரை சட்ட போராட்டம்: ஸ்டாலின்

மாநில அரசின் கட்டுப்பாட்டில் பல்கலை வரும் வரை சட்ட போராட்டம்: ஸ்டாலின்

மாநில அரசின் கட்டுப்பாட்டில் பல்கலை வரும் வரை சட்ட போராட்டம்: ஸ்டாலின்


UPDATED : ஜன 22, 2025 12:00 AM

ADDED : ஜன 22, 2025 10:47 AM

Google News

UPDATED : ஜன 22, 2025 12:00 AM ADDED : ஜன 22, 2025 10:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:
பல்கலை நிர்வாகம் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவி நியமிப்பது முதல்வராக இருக்க வேண்டும், என காரைக்குடியில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சொந்த நிதியில், அவரது தாய் பெயரில் 12 கோடி ரூபாய் செலவில் லக்ஷ்மி வளர்தமிழ் நுாலகம் கட்டப்பட்டுள்ளது. நவீன குளிரூட்டப்பட்ட இந்த நுாலகத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பல்கலையில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, கருத்தரங்க கூடத்திற்கு, வீறுகவியரசர் முடியரசனார் அரங்கம் என்று பெயர் சூட்டினார்.

பின், ஸ்டாலின் பேசியதாவது:

அழகப்பர் வாழ்ந்த மண்ணிற்கு வந்தது பெருமையாக உள்ளது. கல்வித் தொண்டையும், தமிழ் தொண்டையும் அவர் வளர்த்ததால் தான் இன்று பலர் பட்டம் பெற்று, உலகம் முழுவதும் பரவி உள்ளனர். திருக்குறளை பின்பற்றினால் தான் உலகமும் தமிழும் காப்பாற்றப்படும்.

வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் மண்ணில் சமத்துவம் பேசிய வள்ளுவர், வள்ளலார் போன்றவர்களை களவாட ஒரு கூட்டமே செயல்படுகிறது. இதை பாதுகாக்க ஒவ்வொரு தமிழனும் அரணாக இருக்க வேண்டும். வீறுகவியரசர் முடியரசனார் கன்னித்தமிழை வளர்த்தவர்.

சிதம்பரம் நடமாடும் நுாலகம். ஒவ்வொரு திட்டங்கள் அறிவிக்கும் போதும் ப. சிதம்பரம் என்ன கருத்து தெரிவிக்கிறார் என்பதை நான் ஆர்வமுடன் கவனிப்பேன். கொடை குணமும், அறிவுத் தாகமும் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் இதுபோன்று தங்களது ஊரில் நூலகத்தை உருவாக்க வேண்டும். எனக்கு சால்வை அணிவிப்பதை தவிர்த்து, நூல்கள் வழங்க தெரிவித்ததால், இதுவரை 2.75 லட்சம் நுால்கள் வந்தன. அதை பல நுாலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இந்த நுாலகத்திற்கும் எனது சார்பில் ஆயிரம் புத்தகங்களை முதல் கட்டமாக அனுப்பி வைப்பேன்.

கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து. தி.மு.க., கல்விக்கு முன்னுரிமை அளித்தே திட்டங்கள் செயல்படுத்துகிறது. இந்தியாவிலேயே உயர் கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.

உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக, 49 சதவீதம் பெற்று, இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

இதற்காக தான் பல்கலை நிர்வாகம் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவி முதல்வரிடம் இருக்க வேண்டும். மாணவர்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து உருவாக்கி, செலவு செய்வது மாநில அரசு. பேராசிரியர்கள் உட்பட அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது மாநில அரசு. பல்கலை கட்டமைப்பு வசதி செய்து தருவது மாநில அரசு. ஆனால், வேந்தரை மட்டும் மத்திய அரசு நியமிக்க வேண்டுமா?

இதனால் தான் சட்ட போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். மாநிலத்தின் கல்வி உரிமை கிடைக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us