ஹோமியோபதி மருத்துவத்தில் வாழ்வியலுக்கேற்ப சிகிச்சை
ஹோமியோபதி மருத்துவத்தில் வாழ்வியலுக்கேற்ப சிகிச்சை
UPDATED : ஏப் 10, 2025 12:00 AM
ADDED : ஏப் 10, 2025 08:57 AM

இன்று (ஏப்.,10) உலக ஹோமியோபதி தினம். ஆங்கில மருத்துவம், ஹோமியோபதி, சித்தா என இன்று பல்வேறு மருத்துவ முறைகள் வரிசை கட்டி நிற்கின்றன.
ஐரோப்பா, அமெரிக்க நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் என உலகளவில் பரந்து விரிந்துள்ள ஹோமியோபதி மருத்துவ முறை உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமாக அறியப்படுகிறது. இன்று, உலக ஹோமியோபதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.நடப்பாண்டு ேஹாமியோபதி தினத்தின் மையக் கருத்தாக, ஆராய்ச்சி மற்றும் திறனை மேம்படுத்துவது என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டிருக்கிறது.
திருப்பூர் ஹோமியோபதி மருத்துவர் வரலட்சுமி கூறியதாவது:
ஹோமியோபதி மருத்துவம் 200 ஆண்டுகள் பழமையானது. ஒரு நோயாளிக்கு முழுமையான மருத்துவத்தையும், அவரது வெளிப்புற மற்றும் உடல் ரீதியான அறிகுறிகளை மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் பரிசீலிக்கப்பட்டு, மரபு வழி காரணங்கள், முன் கணிப்பு மற்றும் தனிப்பட்ட ஆளுமை பண்புகளை ஆலோசித்து மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
சிந்தனை மற்றும் உடல்நிலையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதால், உலகம் முழுக்க இம்மருத்துவ முறை நன்கு வளர்ந்து வருகிறது. ஒருவரது முழுமையான தனிப்பட்ட வாழ்வியல் மற்றும் நடைமுறைகளை பரிசீலித்து அளிக்கப்படும் மருத்துவமுறை என்பதால், நச்சுத்தன்மையற்றது.
இவ்வாறு, அவர் கூறினார்.

