அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கல்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கல்
UPDATED : ஜன 29, 2025 12:00 AM
ADDED : ஜன 29, 2025 09:47 AM
சேலம்:
பன்னாட்டு லயன் சங்கங்கள் இணைந்து, 4 ஆண்டுக்கு ஒருமுறை மண்டல மாநாட்டை நடத்தி, சிறந்த கல்வியாளர், சாதனையாளர், சமூகத்துக்கு சிறந்த சேவை ஆற்றுவோரை அங்கீகரித்து, விருது வழங்குகிறது. அதன்படி நடப்பாண்டு மாநாடு, காட்பாடியில் நடந்தது.
மண்டல தலைவர் காமராஜர், தலைவர் சார்லஸ், ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமாருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை, வேலுார் தொழில்நுட்ப பல்கலை வேந்தர் விஸ்வநாதன் வழங்கினார்.
இந்த விருது, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் அவரது சிறந்த கல்வி சேவை, அதன்மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் டீனை, பல்கலை வேந்தர் கணேசன், துணைத் தலைவர் அனுராதா, துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.