திறன் வளர்ச்சி பயிற்சி மாணவர்களுக்கு அறிவியல்கல்வியில் மேலும் ஆர்வத்தை ஊக்குவிக்கும்
திறன் வளர்ச்சி பயிற்சி மாணவர்களுக்கு அறிவியல்கல்வியில் மேலும் ஆர்வத்தை ஊக்குவிக்கும்
UPDATED : ஜன 29, 2025 12:00 AM
ADDED : ஜன 29, 2025 09:46 AM
நாமக்கல்:
திறன் வளர்ச்சி பயிற்சி, மாணவர்களுக்கு அறிவியல் கல்வியில் மேலும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் என ராசிபுரத்தில் நடந்த முகாமில், நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பேசினார்.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அறிவியல் ஆய்வக திறனை மேம்படுத்தும் திறன் வளர்ச்சி பணிமனை, ராசிபுரத்தில் நடந்தது.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:
இங்கு நடக்கும் பயிற்சி முகாமில், ஆணி படுக்கை பரிசோதனை, கடத்தல், வெப்பச்சலனம், கதிர்வீச்சு, இணை, தொடர் மின் சுற்று, அணுக்கள், மூலக்கூறுகள், காந்த திசைகாட்டி, சிட்ரிக் ஆசிட், பேக்கிங் சோடா, வடிகட்டுதல், எலக்ட்ரோமேக்னெட்டிக் கிரேன், ஹோமோபோலர் மோட்டார், சோலார் பேனல், எலுமிச்சை பேட்டரி போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவை, அறிவியலில், செய்முறை பயிற்சிகளை, அறிவியல் ஆய்வகத்திறனை, மேம்படுத்துவதற்கானது. இப்பயிற்சி முகாம், மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும். மாநிலத்தில், அறிவியல் கல்வியை மேம்படுத்துவதற்கான முக்கியமான ஒரு படி. இந்த பயிற்சி, மாணவர்களுக்கு அறிவியல் கல்வியில் மேலும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு, உபகரண பெட்டி கள் வழங்கப்பட்டன. நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.