UPDATED : மார் 16, 2026 04:39 PM
ADDED : மார் 16, 2026 04:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு கற்பித்தல் முறை, எழுத்தறிவு மற்றும் எண் அறிவு விழா நடந்தது.
தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளித் துணை ஆய்வாளர், வட்டம் -1 அனிதா கலந்து கொண்டு, பொம்மலாட்டம் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் முறையை பார்வையிட்டு ஆசிரியர்களை பாராட்டினார்.
மேலும், வாசிப்பு திறனில் சிறந்து விளங்கிய மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் சுபத்ரா, புஷ்பலதா, ரேவதி, ராஜம், நிரஞ்சனா தேவி, ஜெயந்தி, சசிகலா, ருக்குமணி மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

