UPDATED : ஜூலை 20, 2025 12:00 AM
ADDED : ஜூலை 20, 2025 09:09 AM

சென்னை:
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான, ஆன்லைன் கலந்தாய்வு நாளையும், சிறப்பு பிரிவு மற்றும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான நேரடி கலந்தாய்வு, நாளை மறுநாளும் துவங்குகிறது என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
பி.வி.எஸ்சி., ஏ.எச்., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், 14ம் தேதி வெளியானது. இப்படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு, வரும், 22ம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்குகிறது.
முதல் நாளில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்கு நடக்கிறது. அதேபோல, 23ம் தேதி காலை 9:30 மணிக்கு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வர வேண்டும். சென்னை, மாதாவரம் பால் பண்ணையில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 'கன்வென்ஷன் சென்டரில்' கலந்தாய்வு நடக்கிறது.
ஆன்லைன் கலந்தாய்வு
பொதுப்பிரிவினருக்கான, பி.வி.எஸ்சி., ஏ.எச்., படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில், நாளை துவங்குகிறது. இதில், வரும் 24ம் தேதி காலை 10:00 மணி வரை, படிப்பு மற்றும் கல்லுாரி விருப்பத்தை, ஆன்லைனில் பதிவு செய்யலாம். இடஒதுக்கீடு மற்றும் சேர்க்கை ஆணை, 26ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.