UPDATED : ஜன 16, 2026 09:30 PM
ADDED : ஜன 16, 2026 09:32 PM
மேட்டுப்பாளையம்:
வாழ்க்கையில் உயர்வதற்கு, கல்வியை விரும்பி கற்க வேண்டும், என, டாக்டர் திலகம் பேசினார்.
காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், 45ம் ஆண்டு விழா, ஆர்.வி., கலையரங்கில் நடந்தது. விழாவுக்கு பள்ளியின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவி தாரிகா வரவேற்றார். பள்ளி செயலர் ஜெயக்கண்ணன், முதல்வர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகப்பேறு மற்றும் மகளிர் டாக்டர் திலகம் பேசுகையில், வாழ்க்கையில் உயர்வதற்கு கல்வியை விரும்பி கற்க வேண்டும். பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமாக வைக்க வேண்டும், என்றார்.
கல்வி, விளையாட்டு துறைகளில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். 12ம் வகுப்பு மாணவி பிரீத்தி நன்றி கூறினார்.

