வயர்களில் காப்பரை பிரித்தெடுக்கும் இயந்திரம்: மேலுார் மாணவி அசத்தல்
வயர்களில் காப்பரை பிரித்தெடுக்கும் இயந்திரம்: மேலுார் மாணவி அசத்தல்
UPDATED : மார் 05, 2025 12:00 AM
ADDED : மார் 05, 2025 10:46 AM

மேலுார்:
மேலுார் மாணவி திவ்யதர்ஷினி வயர்களில் உலோகங்களை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். இவர் தனியார் வேளாண் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி.
பயன்படுத்தப்பட்ட கேபிள்களை எரித்து காப்பர், பிளாஸ்டிக், அலுமினியம் உள்ளிட்ட பொருட்களை பிரித்தெடுப்பதால் காற்று மாசுபடுகிறது. ஆனால் மாணவி, கேபிளை எரிக்காமல் உலோகங்களை பிரித்தெடுக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
5 இன்ச் அளவில் உள்ள ஸ்டீல் ரோலரை எட்டு வரிசையாக பொருத்தி இரண்டு எச்.பி., மின் மோட்டார் மூலம் இயங்குமாறு அமைத்துள்ளேன். மேலும் 1 எம்.எம்., வயர் முதல் 30 எம்.எம்., கேபிள் வரை தனித்தனியாக பிரிப்பதற்கும் வேகத்தை கட்டுப்படுத்தி ஆற்றலை அதிகரிக்கும் வகையில் கியர்பாக்ஸ் பொருத்தியுள்ளேன். இவ் இயந்திரத்தை ரூ.90 ஆயிரத்தில் தயாரித்துள்ளேன். இதை பயன்படுத்துவதால் பணம், நேரம் மற்றும் காற்று மாசுபடுவது தவிர்க்கப்படும்.
மாணவி ஏற்கனவே சீமை கருவேல மரத்தை டிராக்டரின் மூலம் வேருடன் பிடுங்கும் கருவி, நடவு செய்யும் வயலில் தரையை உழுது மட்டப்படுத்தும் தொழி புரட்டி, உணவகங்களில் சப்பாத்தி, பரோட்டா மாவை உருண்டை பிடிக்கும் பால் கட்டிங் இயந்திரங்களை கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.