UPDATED : அக் 22, 2026 05:37 PM
ADDED : அக் 22, 2026 05:39 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்:
அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில எறிபந்து போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மதுரை வருவாய் மாவட்ட அளவில் நடந்த எறிபந்து போட்டியில் 14, 19 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
இவர்கள் சிவகங்கை, தென்காசி மாவட்டங்களில் நடக்கும் மாநில போட்டிகளில் வெற்றி பெற தலைமையாசிரியர் ரெக்ஸ், உடற்கல்வி ஆசிரியர் மாயக்கண்ணன், ஆசிரியர்கள், பெற்றோர் மாணவிகளை பாராட்டினர்.
