UPDATED : அக் 22, 2026 05:39 PM
ADDED : அக் 22, 2026 05:40 PM
மதுரை:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 4ல் 6574 காலிப் பணியிடங்களை நிரப்ப 2027, ஜனவரி 10ல் தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
இன்று துவங்கிய இப்பயிற்சி வகுப்பு, 2027 ஜன., 9 வரை நடக்கவுள்ளது. சேர விரும்புவோர், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் நேரடியாக பயிற்சியில் சேரலாம்.
இதற்கு இணையதள முகவரி, https://www.tamilnaducareerservices.in.gov.in ல் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதில் தேர்வுக்கான பாடக் குறிப்புகள், மாதிரித் தேர்வுகள், வினாத்தாள்கள், நடப்பு நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்யலாம்.
விவரங்களுக்கு 94990 55918ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
