UPDATED : டிச 21, 2024 12:00 AM
ADDED : டிச 21, 2024 11:17 AM

மதுரை :
மதுரை காமராஜ் பல்கலை தேர்வாணையராக பொறுப்பு வகித்த தர்மராஜ் மாற்றப்பட்டு அந்த இடத்தில் சீனியர் துணைப் பதிவாளர் முத்தையா பொறுப்பேற்றார்.
தர்மராஜ் மீது தேர்வுத்துறை அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து தேர்வாணையர் பதவியை ராஜினாமா செய்வதாக தர்மராஜ் பதிவாளர், கன்வீனர் குழுவிற்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் புகார் தொடர்பாக தேர்வாணையர், புகார் அளித்த பெண் ஆகியோரிடம் கன்வீனர் குழு விசாரணை நடத்தியது. இந்நிலையில் தர்மராஜின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. அவருக்கு பதில் சீனியர் துணைப் பதிவாளர் முத்தையா புதிய தேர்வாணையராக பொறுப்பேற்றார்.
24 ஆண்டுகளுக்கு பின்...
தேர்வாணையராக பெரும்பாலும் பேராசிரியர் தகுதியிலேயே நியமிக்கப்பட்டனர். 2000ல் சிதம்பரம் என்பவர் பேராசிரியர் அல்லாத (நான் டீச்சிங்) பிரிவில் இப்பதவி வகித்தார்.
அதன் பின் 24 ஆண்டுகளுக்கு பின் அலுவலர்கள் பிரிவில் தேர்வாணையர் (பொறுப்பு) பதவி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காமராஜ் பல்கலை நிர்வாக அலுவலர் சங்கத்தின் பொருளாளராகவும் முத்தையா பதவி வகிக்கிறார். துணைப் பதிவாளருக்கு தேர்வாணையர் பதவி வாய்ப்புக்கு பல்கலை அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.