UPDATED : ஏப் 14, 2025 12:00 AM
ADDED : ஏப் 14, 2025 10:23 AM
திருப்பரங்குன்றம்:
இந்திய அளவில் நடத்தப்படும் பொறியியல் பட்டதாரி திறனறிவு தேர்வில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி மாணவர் ஜெயந்த் கிப்ட்சன் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
2025ம் ஆண்டுக்கான பொறியியல் பட்டதாரி திறனறிவு (கேட்) தேர்வில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் கட்டடக் கலைத்துறை மாணவர் ஜெயந்த் கிப்ட்சன் 100க்கு 83 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மாணவரை கல்லுாரித் தலைவர் ஹரி தியாகராஜன், முதல்வர் அசோக்குமார், துறைத் தலைவர் ஜினு லுாஷிதா கிச்லே மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். மாணவர் கூறுகையில், கடின உழைப்பு, திறமையான கல்லுாரி நிர்வாகம், ஆசிரியர்களின் வழிகாட்டுதலே இந்த சாதனைக்கு காரணம் என்றார்.
நிர்வாகத்தினர் கூறுகையில், மாணவரின் சாதனை சக மாணவர்களுக்கும், எதிர்கால கட்டடக் கலைத்துறை மாணவர்களுக்கும் மிகப்பெரிய ஊக்கம் கொடுக்கும். இச்சாதனை, கட்டடக்கலை துறையில் அர்ப்பணிப்பும், புதுமையான சிந்தனையும் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை காட்டுகிறது, என்றனர்.