sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுங்க!

/

கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுங்க!

கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுங்க!

கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுங்க!


UPDATED : மே 05, 2025 12:00 AM

ADDED : மே 05, 2025 08:29 AM

Google News

UPDATED : மே 05, 2025 12:00 AM ADDED : மே 05, 2025 08:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதம் முடிந்து, ஜூன், 2 ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என பள்ளிகல்வித்துறை பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

* கோடை வெப்பம் தொடர்ந்து அதிகமாகி வருவதால், வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிகளவு தண்ணீரை குடிக்க செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனை பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

* தனிமை உணர்வுகளை தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், ஒன்றாக அமர்ந்த உணவருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் ஆகியவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும், மனநலனை பேணவும் முடியும்.

* டிவி, மொபைல் போன் பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். இயன்றவரை அவர்களுடன் நேரத்தை செலவிட்டு விடுமுறை நாட்களை உபயோகமாக்க வேண்டும்.

* உடல் ஆரோக்கியத்துக்கு விடுமுறை நாட்களிலும் சமச்சீரான உணவு அவசியம். எனவே, பாரம்பரிய உணவு, பழங்கள் அதிகளவில் சாப்பிடுவதை ஊக்கப்படுத்தலாம். தினமும் இருவேளை பல் துலக்கி, குளிக்க, பெரியோரை மதிக்க, அவர்களுக்கு உதவி செய்யும் பழக்கங்களை கற்றுத்தர வேண்டும்.

* விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம். சுற்றுலா செல்லும் போது பெற்றோர் கட்டாயம் உடனிருக்க வேண்டும்.

* இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்கள் விடுமுறை நாட்களை பயன்படுத்தி அவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரலாம்.

* அருகில் உள்ள பொது நுாலகங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களை படிக்க ஊக்குவிக்கலாம். மகன், மகளின் ஆர்வத்தை பொறுத்து காமிக்ஸ், சிறார் கதை மற்றும் நீதிநுால்கள் படிக்க கற்றுத்தரலாம்.






      Dinamalar
      Follow us