sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ரஷ்யன் அறிவியல், கலாசார மையத்துடன் மணக்குள விநாயகர் கல்லுாரி ஒப்பந்தம்

/

ரஷ்யன் அறிவியல், கலாசார மையத்துடன் மணக்குள விநாயகர் கல்லுாரி ஒப்பந்தம்

ரஷ்யன் அறிவியல், கலாசார மையத்துடன் மணக்குள விநாயகர் கல்லுாரி ஒப்பந்தம்

ரஷ்யன் அறிவியல், கலாசார மையத்துடன் மணக்குள விநாயகர் கல்லுாரி ஒப்பந்தம்


UPDATED : பிப் 08, 2026 11:47 AM

ADDED : பிப் 08, 2026 11:49 AM

Google News

UPDATED : பிப் 08, 2026 11:47 AM ADDED : பிப் 08, 2026 11:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி, ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாசாரம் மையம், இந்தோ ரஷ்யன் கவுன்சில் கலாசாரம், கல்வி, வர்த்தகம் மற்றும் ரஷியன் பெடரல் ஏஜென்ஸி ரோஸோ ட்ருடிணிச்செஸ்ட்வோ ஆகிய மூன்று நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்லுாரி மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

பொருளாளர் ராஜராஜன், பொறியியல் கல்லுாரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி, ரஷியன் இல்லம் இயக்குனர் அலெக்சாண்டர் ஏ டொடனொவ், இந்தோ ரஷ்யன் கவுன்சில் கலாசாரம், கல்வி மற்றும் வர்த்தகம் தலைவர் அசோக்குமார் கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதில், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி தேர்வு கட்டுபாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், கைலாசம் கலந்து கொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொதுவான செயல்பாடுகள், திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒத்துழைப்புக் கொள்கைகளை நிறுவுதல், கல்வி, அறிவியல் மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறைகளில் பொதுவான இலக்குகளை மேம்படுத்துதல், கலாசார உறவுகளை மேம்படுத்துதல், கலாசார, கல்வி, அறிவியல் மற்றும் பிற ஆர்வமுள்ள துறைகளில் குறிப்பிட்ட ஒத்துழைப்பு வடிவங்களை நிறுவுதல், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்றவை செயல்படுத்தப்படும்.






      Dinamalar
      Follow us