தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரி பல்கலையில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி பல்கலையில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி பல்கலையில் தேசிய கருத்தரங்கம்


UPDATED : பிப் 08, 2026 11:52 AM

ADDED : பிப் 08, 2026 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2026 11:52 AM ADDED : பிப் 08, 2026 11:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், 'விலங்கு நலன் மற்றும் பரிசோதனையில் நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள்' என்ற தேசிய கருத்தரங்கம் நடந்தது.

புதுச்சேரி பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை, வாழ்க்கை அறிவியல் பள்ளி, நிறுவன கண்டுபிடிப்பு கவுன்சில் மற்றும் நிறுவன விலங்கு நெறிமுறைக் குழுவுடன் இணைந்து நடத்திய கருத்தரங்கை, மத்திய அரசின் சி.சி.எஸ்.ஐ.ஏ., மூத்த ஆலோசகர் விவேக் தியாகி துவக்கி வைத்தார்.

துணை வேந்தர் பிரகாஷ் பாபு தலைமை தாங்கி பேசுகையில் 'ஆராய்ச்சியில் குரலற்ற விலங்குகளுக்கான குரலாக சி.சி.எஸ்.ஐ.ஏ., மற்றும் அதன் நியமனங்களின் நெறிமுறை ஆணையை அடிக்கோடிட்டுக் காட்டினார். டாக்டர் ருக்மணி வரவேற்றார். அமைப்புச் செயலாளர் பேராசிரியர் ஹன்னா ரேச்சல் வசந்தி விளக்கவுரையாற்றினார்.

வாழ்க்கை அறிவியல், மருந்தியல், கால்நடை அறிவியல், எம்.டி., மருந்தியல், எம்.டி., சித்த மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சுமார் 250 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழகம் மற்றும் அருகிலுள்ள நிறுவனங்களைச் சேர்ந்த 45 ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

பள்ளியின் டீன் ஜோசப் செல்வின் வாழ்த்தி பேசினார். தொழில்நுட்ப அமர்வுகளில் டாக்டர்கள் ஹரிஷங்கர், உதய்குமார், ஜெரால்ட் மகேஷ், பாரதிதாசன், கவிமணி, விவேக் தியாகி ஆகியோர் கருத்துரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us