தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் நுாலகத்திற்கு நல்ல வரவேற்பு முதல் ஆளாக வந்த 80 வயது முதியவர்

தினமலர் நுாலகத்திற்கு நல்ல வரவேற்பு முதல் ஆளாக வந்த 80 வயது முதியவர்

தினமலர் நுாலகத்திற்கு நல்ல வரவேற்பு முதல் ஆளாக வந்த 80 வயது முதியவர்


UPDATED : பிப் 08, 2026 11:53 AM

ADDED : பிப் 08, 2026 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2026 11:53 AM ADDED : பிப் 08, 2026 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரு தினமலர் அலுவலக நுாலகத்திற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடை த்து உள்ளது. நேற்று, 80 வயது முதியவர் முதல் ஆளாக நுாலகத்திற்கு வந்து புத்தகங்களை படித்து சென்றார்.

பெங்களூரு தினமலர் அலுவலகத்தில், 'கடல் தாமரை புத்தக பூங்கா' என்ற பெயரில், நேற்று முன்தினம் நுாலகம் திறக்கப்பட்டது.

இந்த நுாலகத்திற்கு பெங்களூரில் வசிக்கும் தமிழர்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

நேற்று காலையில் இருந்தே பலர், தினமலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நுாலகம் திறந்ததற்கு வாழ்த்து கூறினர்.

'உங்கள் நுாலகத்தில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன; எவ்வளவு நேரம் திறந்திருக்கும்; நுாலகத்தில் உறுப்பினராக என்ன செய்ய வேண்டும்' என்று ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டனர். குடும்பத்துடன் நுாலகத்திற்கு வருவதாகவும் கூறினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவரும், பெங்களூரு ஜெயநகர் எடியூரில் மகள் வீட்டில் வசிப்பவருமான சண்முகசாமி, 80, என்பவர், நேற்று காலை முதல் ஆளாக நுாலகத்திற்கு வந்தார். இங்குள்ள புத்தகங்களை ஆர்வமாக பார்த்து படித்தார்.

பெங்களூரில் தமிழ் பத்திரிகை சார்பில் நுாலகம் திறக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துகள் என்றார்.

இது, சாதனையின் மைல்கல் என்று உற்சாகமாக பேசியதுடன், அடிக்கடி இங்கு வந்து நிறைய புத்தகங்களை படிக்க ஆசைப்படுவதாகவும் கூறினார்.

தினமலர் நாளிதழை பல ஆண்டுகளாக படிக்கிறேன். எந்த ஊருக்கு சென்றாலும், தினமலர் நாளிதழை படிக்காமல் ஒரு நாள் கூட இருந்தது இல்லை.

உண்மையான செய்திகளை மக்களுக்கு கொடுக்கும் ஒரே பத்திரிகை தினமலர் என்றும் புகழாரம் சூட்டினார்.

இவரது மனைவி கமலா, சமூக நலத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .

நுாலகம் தொடர்பாக 93615 00327, 89715 09091 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us