தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மான்செஸ்டர் சர்வதேச பள்ளி ஆண்டு விழா

மான்செஸ்டர் சர்வதேச பள்ளி ஆண்டு விழா

மான்செஸ்டர் சர்வதேச பள்ளி ஆண்டு விழா


UPDATED : நவ 24, 2026 11:27 AM

ADDED : நவ 24, 2026 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:27 AM ADDED : நவ 24, 2026 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மான்செஸ்டர் சர்வதேச பள்ளியில் சர்வதேச கல்வித் திட்டமான ஐபி பிரிவு மாணவர்களின் ஆண்டு விழா 'தி மான்செஸ்டர் வே - எக்ஸ்பெக்ட் தி அன்எக்ஸ்பெக்டட்' என்ற கருப்பொருளில் நடந்தது.

அமைச்சர் சம்பத்குமார் தலைமை விருந்தினராகவும், எம்.எல்.ஏ., கனிமொழி சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். அமைச்சர் பேசும்போது, மான்செஸ்டர் பள்ளியின் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்பு, கல்வித் தரம், மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் கல்வி முறைகளைப் பாராட்டினார்.

மாணவர்கள் பாடப்புத்தக அறிவோடு மட்டுமின்றி, சுயமாகச் சிந்திக்கும் திறன், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் ஆர்வம், தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

எம்.எல்.ஏ., கனிமொழி, மாணவர்களின் திறமைகளையும் பள்ளியின் சிறப்பான ஏற்பாடுகளையும் பாராட்டினார். மாணவர்களின் இசை, நடனம், நாடக நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி தலைவர் மூர்த்தி, தாளாளர் பிரியா கலந்து கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us