தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் ரூ.1.45 கோடியில் ஆராய்ச்சிகள்

அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் ரூ.1.45 கோடியில் ஆராய்ச்சிகள்

அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் ரூ.1.45 கோடியில் ஆராய்ச்சிகள்


UPDATED : நவ 24, 2026 11:26 AM

ADDED : நவ 24, 2026 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:26 AM ADDED : நவ 24, 2026 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் (ஜி.சி.டி.,) முதல்வர் ஆராய்ச்சி மானியத் திட்டத்தின் கீழ், ஐந்து பேராசிரியர்கள் ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஆராய்ச்சிகளுக்கு மொத்தம் ரூ.1.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் முதல்வர் ஆராய்ச்சி மானியத் திட்டம், உயர்கல்வி நிறுவனங்களில் புதுமையான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களையும் நடைமுறைப் பயன்பாட்டுக்கான தீர்வுகளையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பேராசிரியர்களின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்தப்படுகின்றன.

மின் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் ராஜேஸ்வரி, ரூ.31 லட்சம் நிதியில், 'கோவை நகருக்கான நிலையான மைக்ரோகிரிட் அமைப்பு' என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார். மின்தடை அல்லது மின் கட்டமைப்பில் பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும், சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் வாயிலாக நகரின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் மாதிரி கட்டமைப்பை உருவாக்குவது இதன் நோக்கம்.

தொழில்துறை உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் அருண் பாஸ்கர், ரூ.33.48 லட்சம் நிதியில், சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய 'டகடோஸ்' எனும் அரிய வகை சர்க்கரையை குறைந்த செலவில் தயாரிப்பது குறித்து ஆராய்கிறார். வழக்கமான மூலப்பொருட்களுக்குப் பதிலாக எளிதில் கிடைக்கும் பிரக்டோஸைப் பயன்படுத்தி, நொதிகள் மூலம் தயாரிக்கும் முறையை உருவாக்குவது திட்டத்தின் நோக்கம். இதனால், உற்பத்திச் செலவு மற்றும் ரசாயனக் கழிவுகளைக் குறைக்க முடியும்.

மெக்கானிக்கல் துறை பேராசிரியர் ரமேஷ், பேட்டரிகளில் விலை உயர்ந்த பிளாட்டினத்துக்குப் பதிலாகக் குறைந்த விலையில் கிடைக்கும் மெக்னீசியத்தைப் பயன்படுத்தி, அதே செயல்திறனைப் பெறுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஐ.டி., துறை பேராசிரியர் தேவி, ஐ.ஓ.டி., தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்.

மின்னணு மற்றும் கருவியியல் துறை பேராசிரியர் அன்பு, குடிநீர் விற்பனை இயந்திரங்களில் நீரின் தரம், அளவு மற்றும் இயந்திரங்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, தானியங்கி முறையில் தகவல் தெரிவிக்கும் சென்சார் கருவியை உருவாக்கி வருகிறார்.

இந்நிதிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை முதல்வர் புருஷோத்தமன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us