UPDATED : ஆக 06, 2025 12:00 AM
ADDED : ஆக 06, 2025 09:13 AM

சென்னை:
மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுகளுக்கான மதிப்பெண் நகல்களை மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை இன்று (ஆக.6) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.
மதிப்பெண் விவரங்களை பார்த்த பிறகு, மறுஆய்வு அல்லது மதிப்பெண் மறுகூட்டல் வேண்டுமெனில் அதற்கான விண்ணப்பத்தை அதே இணையதளத்தில் உள்ள Application for Retotalling / Revaluation என்ற இணைப்பில் சென்று ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதில் நாளை (ஆக.,7) காலை 11 மணி முதல் நாளை மறுநாள் (ஆக., 8) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீடிற்கு பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.505 கட்டணமாக செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305ம், ஏனைய பாடங்களுக்கு ரூ.205ம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் தங்கள் மாவட்ட முதன்மை கல்வித்துறை அலுவலகத்தில் நேரில் சென்று கட்டணத்தை செலுத்த வேண்டும்.

