அரசு பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு எம்.பி.பி.எஸ்.,சீட்
அரசு பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு எம்.பி.பி.எஸ்.,சீட்
UPDATED : ஆக 07, 2025 12:00 AM
ADDED : ஆக 07, 2025 09:41 AM

தேனி:
அரசு பள்ளியில் 2020ல் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 6 பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது.
மதுரை திருமங்கலம் கார்த்திகேயன்,திருப்பாச்சேத்தி சிவரஞ்சனி, திருவாரூர் நன்னிலம் ஆஷிகா ஆகிய மூவரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., படிக்க தேர்வாகினர்.
இவர்களை தவிர அரசு பள்ளி மாணவர்கள் தினேஷ்குமார், நித்திஸ்குமார், சுவேதா ஆகியோர் விளையாட்டுத் திறன் சலுகையில் தேர்வாகினர்.
ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மருத்துவக்கல்வி இயக்குனரகம், தேசிய தேர்வு முகமையின் வழிகாட்டுதலில் விரல்ரேகை, கருவிழி பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு சுய விபரம், புகைப்படம் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே மாணவர்கள் கல்லுாரியில் அனுமதிக்கப்படுகின்றனர் என கல்லுாரி முதல்வர் முத்துசித்ரா தெரிவித்தார்.