UPDATED : ஆக 13, 2025 12:00 AM
ADDED : ஆக 13, 2025 09:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., முதல் சுற்று கலந்தாய்வில், கல்லுாரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மருத்துவ படிப்பு கலந்தாய்வில், கல்லுாரிகளை தேர்வு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி பட்டியல், 18ல் வெளியிடப்படும்.
கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை, 18 முதல் 24ம் தேதி பகல் 12:00 மணி வரை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.