UPDATED : செப் 24, 2026 04:42 PM
ADDED : செப் 24, 2026 04:43 PM
ஒட்டன்சத்திரம்:
தமிழ்நாடு மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பு, திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள் சங்கம் சார்பில் கர்ப்ப, பிரசவத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நெறிமுறைகள் குறித்த மருத்துவக் கல்வி கருத்தரங்கம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.
தமிழ்நாடு மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் அமலாதேவி, திண்டுக்கல் மகப்பேறு மருத்துவர் சங்கத்தலைவர் ரீனா பிரபா கோகிலா, துணைத்தலைவர் மலர்ச்செல்வி, செயலாளர் கவிதா, இணைப்பொருளாளர் சரண்யா கலந்து கொண்டனர்.
இந்திய மருத்துவ சங்க ஒட்டன்சத்திரம் கிளை செயலாளர் ஆசைத்தம்பி, மூத்த மருத்துவர்கள் பால் இம்மானுவேல், தர்மாம்பாள் பிரேமா, கீதா, அனுராதா, வட்டார மருத்துவ அலுவலர்கள் காசி முருகப்பிரபு, கோகுல், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
