தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான ஹாக்கி அணிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு

மாநில அளவிலான ஹாக்கி அணிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு

மாநில அளவிலான ஹாக்கி அணிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு


UPDATED : செப் 24, 2026 04:43 PM

ADDED : செப் 24, 2026 04:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 04:43 PM ADDED : செப் 24, 2026 04:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான ஹாக்கி அணிக்கான தேர்வு கள்ளக்குறிச்சியில் நடந்தது.

கடலுார் மண்டலத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், அரியலுார், பெரம்பலுார், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 14, 17, 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்கு போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாணவர்கள், மாணவிகளுக்கு தனி தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்கள், 200 மாணவிகள் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட சி.இ.ஓ., கார்த்திகா வழிகாட்டுதலின் படி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மோகன் செல்வம் மேற்பார்வையில் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், ஒவ்வொரு பிரிவிலும் தலா 11 மாணவ, மாணவிகள் அணிகள் கொண்ட மாநில அளவிலான ஹாக்கி போட்டி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஆணை வழங்கப்பட்டது.

இதில் உடற்கல்வி இயக்குனர்கள் பாலாஜி, ஹரிஹரன், பாலகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஷம்சத்பேகம், பரமேஸ்வரி, தினகரன், சாமிதுரை, பாலு, பிரபு ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us