UPDATED : ஜன 06, 2025 12:00 AM
ADDED : ஜன 06, 2025 08:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை, வேளாண் பல்கலையில், மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் துறையில் வரும் 7ம் தேதி, மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது.
இதில், விவசாயிகள், பொதுமக்கள், அறிவியல் பட்டதாரிகள், நாற்றங்கால் உரிமையாளர்கள், புதிய தொழில்முனைவோர், மகளிர் பங்கேற்றுப் பயனடையலாம்.
காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்க, வரிகள் உட்பட ரூ.1180 கட்டணம் செலுத்த வேண்டும். பங்கேற்பாளர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
வரும் 6ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 98429 31296 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.