UPDATED : பிப் 15, 2025 12:00 AM
ADDED : பிப் 15, 2025 10:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சீரகாபாடி, மதுரையன்காட்டை சேர்ந்தவர் சின்னதாயி, 85. இவர் கடந்த, 30ல் வீட்டில் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவர், கொலை செய்தது தெரிந்தது. இதனால் அவரை கைது செய்தனர்.
மாணவர், மொபைல் போனில் கொலை தொடர்பான வீடியோக்களை பார்த்து, சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் மாணவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அதன்படி நேற்று, காவலில் இருந்த மாணவர், பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு உடல், மன நலன் சார்ந்த பரிசோதனை செய்யப்பட்டது. பின் மாணவரிடம் விசாரிக்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.