UPDATED : பிப் 15, 2025 12:00 AM
ADDED : பிப் 15, 2025 10:25 AM
சென்னை:
கிண்டி பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களால் நடத்தப்படும் ஆற்றல் 25 நாளை அண்ணா பல்கலை விவேகானந்தா அரங்கத்தில் இன்று நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆற்றல் என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லியோனி தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு 400மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கிட்பை வழங்கப்படும். மாணவர்களுக்கு மதிய உணவும் ஸ்நாக்ஸ் மற்றும் பானங்களும் வழங்கப்படும்.
மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் வகுப்பு வாரியாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்வுடன் விவேதா, ஜீனவ்ஸ் பிரைவேட் லிட் மற்றும் ஏமேக் ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.