UPDATED : டிச 24, 2025 07:54 AM
ADDED : டிச 24, 2025 07:55 AM
ஒட்டன்சத்திரம்:
காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனம் பெற்றவர்களை அமைச்சர் சக்கரபாணி பாராட்டினார்.
சென்னைக்கு அடுத்தபடியாக ஒட்டன்சத்திரம் தொகுதி காளாஞ்சிபட்டியில் தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த இலவச போட்டி தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது.
இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்த பிரீத்தி, சவுந்தரராஜன், வசந்தகுமார், கார்த்திகா, சம்பத்குமார், கருப்புசாமி, முகமது அபு சாலிக் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமன ஆணைகளை பெற்றனர்.
வெற்றி பெற்ற இவர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு, அவைத் தலைவர் செல்வராஜ் ,பயிற்சி மைய ஆசிரியர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

