தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு இலவச வினா - விடை புத்தகம் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு இலவச வினா - விடை புத்தகம் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு இலவச வினா - விடை புத்தகம் வழங்கல்


UPDATED : டிச 24, 2025 07:52 AM

ADDED : டிச 24, 2025 07:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2025 07:52 AM ADDED : டிச 24, 2025 07:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:
குளித்தலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட, ஒன்றிய பேரூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறக்கட்-டளை சார்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு இலவச வினா - விடை புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாணவ மாணவியருக்கு இலவச வினா-விடை புத்தகங்களை, குளித்தலை தி.மு.க., -எம்.எல்.ஏ., மாணிக்கம் வழங்கினார். குளித்தலை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்-பள்ளி, இனுங்கூர், நெய்தலுார் காலனி, ஆலத்துார், அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டைமேடு அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, பணிக்கம்பட்டி, திம்மம்பட்டி திம்மாச்சிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 960 மாணவ மாணவியருக்கு இலவச வினா-விடை புத்தகங்கள் வழங்கப்பட்டன.

குளித்தலை ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் தியாகராஜன், சந்திரன், அரசு வக்கீல் சாகுல் ஹமீது, பள்ளி தலைமை ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us