UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM
ADDED : ஜூலை 16, 2024 10:43 AM

வாடிப்பட்டி:
மதுரையில் கல்வித்துறையின் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை தனிச்சியம் பள்ளியில் அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் 15 வயதுக்கு மேல் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு வழங்கப்படுகின்றன.
மாவட்டத்தில் இக்கல்வியாண்டில் 24,250 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே 2041 எழுத்தறிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு பயிற்சி அளிக்க 2041 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திட்டப் பயனாளிகளுக்கான கல்வி உபகரணங்களை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். சி.இ.ஓ., கார்த்திகா முன்னிலை வகித்தார்.
எம்.எல்.ஏ., வெங்கடேசன், தொடக்க கல்வி டி.இ.ஓ., சுப்பாராஜ், தி.மு.க.,ஒன்றிய செயலாளர் தன்ராஜ், வாடிப்பட்டி, அலங்காநல்லுார் பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன், ரேணுகா ஈஸ்வரி, துணை தலைவர்கள் கார்த்திக், சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கடந்தாண்டு இத்திட்டத்தில் எழுத்தறிவு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கொடிக்குளம், ஆனையூர், எஸ்.மலம்பட்டி, திருமங்கலம் பி.கே.என்., ஆரம்பப் பள்ளி, எம்.சுப்பலாபுரம், கொங்கப்பட்டி, அழகாபுரி மையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேற்கு ஒன்றியத்தில் சிறப்பாக செயல்படுத்திய வட்டாரக்கல்வி அலுவலர் ஜான்கென்னடி அலெக்சாண்டருக்கு கேடயம் வழங்கப்பட்டது. உதவி திட்ட அலுவலர் சரவணமுருகன், பி.இ.ஓ.,க்கள் ஆஷா, ஜெசிந்தா, ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.