sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு

/

பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு

பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு

பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு


UPDATED : ஜூலை 19, 2025 12:00 AM

ADDED : ஜூலை 19, 2025 08:59 AM

Google News

UPDATED : ஜூலை 19, 2025 12:00 AM ADDED : ஜூலை 19, 2025 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தில் இரு வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பாரோ? என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:


பள்ளிக் கல்வித்துறையின் தினசரி சாதனைகள் வரிசையில் இன்று, திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் மது பாட்டிலால் ஆசிரியரைத் தாக்கி மண்டையை உடைத்திருக்கிறார்கள். மற்றொருபுறம், மதுராந்தகம் அருகே புதுப்பட்டு அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து, 5 மாணவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

பள்ளிக் கல்வித் துறையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க, உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ப வடிவில் இருக்கைகள் வைப்போம் என, பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருக்கிறார். சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்களா அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே?

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us