UPDATED : ஆக 27, 2024 12:00 AM
ADDED : ஆக 27, 2024 09:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துப்பட்டு:
ஒன் அக்கார்டு அமைப்பு சார்பில், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறையின் ஆலோசனை கூட்டம், சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், சியோன் கல்வி குழும தலைவர் விஜயன், எம்.சி.சி., பள்ளி முதல்வர் வில்சன் ஆகியோர் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சிறுபான்மையினர் பள்ளி கொள்கைகளுக்கு எதிராக நடப்பது குறித்த குறிப்பாணையை, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் வழங்கினர்.
இது குறித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் சமம் என்ற கொள்கையில் வாழ வேண்டும். சமத்துவம் என்கிற ஒன்றை அடையும் வரை, அனைத்து தரப்பினருக்கும் சலுகைகளை கொடுத்தாக வேண்டும், என்றார்.

