sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏவுகணை சோதனை வெற்றி

ஏவுகணை சோதனை வெற்றி

ஏவுகணை சோதனை வெற்றி


UPDATED : செப் 14, 2024 12:00 AM

ADDED : செப் 14, 2024 10:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2024 12:00 AM ADDED : செப் 14, 2024 10:01 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாலாசோர்:
தரையில் இருந்து செங்குத்தாக வானில் பாய்ந்து செல்லும், குறைந்த துார ஏவுகணை சோதனையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், கடற்படையும் இணைந்து நேற்று நடத்தின.

ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரை பகுதியில் நடந்த இந்தச் சோதனை, இரண்டாவது முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. டி.ஆர்.டி.ஓ., உருவாக்கி உள்ள இந்த ஏவுகணை, குறைந்த உயரத்தில், அதிக வேகத்தில் வந்த வான் இலக்கை துரத்தி, துல்லியமாக தாக்கி அழித்தது.

பல்வேறு சோதனை கருவிகளை பயன்படுத்தி, ஏவுகணையின் செயல்திறனை டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் கணக்கிடுகையில், அனைத்து அளவு கோல்களையும் இந்தஏவுகணை பூர்த்தி செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ., தலைவர் சமீர் வி காமத் உள்ளிட்டோர், விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது, இந்திய கடற்படையின் வான் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, நாட்டின் போர் தயார் நிலையை உறுதிப்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us