நாகலுார் அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் எம்.எல்.ஏ., ஆய்வு
நாகலுார் அரசுப் பள்ளி மாணவர் விடுதியில் எம்.எல்.ஏ., ஆய்வு
UPDATED : அக் 28, 2026 05:41 PM
ADDED : அக் 28, 2026 05:43 PM
கள்ளக்குறிச்சி:
நாகலுார் அரசு பள்ளி மாணவர் விடுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவர் விடுதி நாகலுாரில் உள்ளது. விடுதியில் பள்ளி மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ., விடுதியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விடுதியில் மாணவர்கள் தங்கியுள்ள விபரம், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
தொடர்ந்து கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிக்சைக்காக வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அலுவலர்கள் உடனிருந்தனர்.
