UPDATED : அக் 28, 2026 05:43 PM
ADDED : அக் 28, 2026 05:45 PM
ஈரோடு:
முஸ்லிம் மாணவ, மாணவியர் உலகளாவிய கல்வி வாய்ப்பை பெற, வெளிநாடு சென்று படிக்க, ஒரு மாணவருக்கு தலா, 36 லட்சம் ரூபாய் என, 10 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கு கடந்த, 15 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கிய நிலையில் நவ., 9 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல், நிதி, மனிதநேயம், கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் உட்பட பல்வேறு முதுகலை பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெறுபவராக இருக்க வேண்டும். வெளிநாடு சென்ற பின் அளிக்கப்படும் விண்ணப்பம், ஏற்கனவே கல்லுாரியில் சேர்ந்தவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாது.
விண்ணப்பத்தை, www.bcmbcmw.tn.gov.in/ welfschemes_minorities.htm என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை-5' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
