அரசு கல்லுாரி மாணவர்களின் மொபைல் செயலிகள் அறிமுகம்
அரசு கல்லுாரி மாணவர்களின் மொபைல் செயலிகள் அறிமுகம்
UPDATED : அக் 23, 2026 01:34 PM
ADDED : அக் 23, 2026 01:35 PM
கோவை:
அரசு கலை கல்லுாரி பி.ஏ., ஆங்கில இலக்கியம் பயிலும் மூன்றாமாண்டு மாணவர்கள் உருவாக்கிய, 11 கல்வி சார்ந்த மொபைல் செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
கல்லுாரியில் நடந்த 'ஆப் ஸ்டார் 2026' வெளியீட்டு விழாவுக்கு ஆங்கில துறைத்தலைவர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், செயலிகளை வெளியிட்டார். கல்லூரி முதல்வர் எழிலி வாழ்த்துரை வழங்கினார்.
6ம் வகுப்பு மாணவர்கள் விளையாட்டுகள், கதைகள் மற்றும் 'இன்டராக்டிவ் டிரெயினிங்' மூலம் ஆங்கிலம் கற்க உதவ, இச்செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இலக்கியக் கல்வி, தொழில்நுட்பம், புதுமையான கற்பித்தல் முறைகளை ஒருங்கிணைக்கும். சமச்சீர் கல்வி 6ம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு இச்செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சொற்களஞ்சியம், இலக்கணம், இயைபுச் சொற்கள், வாக்கிய அமைப்பு மற்றும் வாசிப்புப் புரிதல் ஆகிய திறன்களை விளையாட்டுகள் வாயிலாகப் பயிற்றுவிக்கின்றன. குறிப்பாக அரசுப் பள்ளி, தமிழ் வழி மாணவர்களுக்கு இவை பயன்படும்.
