'டெட்' மறுதேர்வு: ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி ஆரம்பம்
'டெட்' மறுதேர்வு: ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி ஆரம்பம்
UPDATED : அக் 23, 2026 01:35 PM
ADDED : அக் 23, 2026 01:36 PM
கோவை:
ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இதில், 1.10 லட்சம் ஆசிரியர்கள் தோல்வியடைந்தனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தாள் 2 தேர்வில், 38.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். இதனால், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, டிச. மாதம் சிறப்பு டெட் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூலம், வார இறுதி நாட்களில் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இவ்வகுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ளோர் பதிவு செய்ய பள்ளிகளுக்கு, பிரத்யேக கூகுள் பார்ம் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த வார இறுதியில் வகுப்புகள் துவங்குகிறது.
ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில்,' கடந்தாண்டு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தியதால், நெட்வொர்க் பிரச்னையால் வகுப்பில் இணைவது, சந்தேகம் கேட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தற்போது நேரடி வகுப்பு நடத்தப்படுகிறது. முக்கிய தலைப்புகளுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படும். வகுப்பு சார்ந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்,' என்றனர்.
