UPDATED : ஜன 20, 2026 12:33 PM
ADDED : ஜன 20, 2026 12:34 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை 'மொபைல் பாஸ்போர்ட் சேவா வேன்' நிறுத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கிராமப்புற மற்றும் தொலைதுார பகுதிகளில் வசிக்கும் மக்கள் 'பாஸ்போர்ட்' விண்ணப்பிக்கவும், இது தொடர்பான சேவைகளை எளிதில் பெறவும் 'மொபைல் பாஸ்போர்ட் சேவா வேன்' என்ற திட்டத்தை வெளி விவகார அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
நாளை 21ம் தேதி 22 மற்றும் 23 தேதிகளில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 'மொபைல் பாஸ்போர்ட் சேவா வேன்' நிறுத்தப்பட உள்ளது. மேலும், அடுத்த 3 வாரங்களில் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தினத்தன்று மட்டும் கலெக்டர் அலுவலகத்தில் இந்த வேன் நிறுத்தப்படும்.
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவா இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

