UPDATED : டிச 06, 2024 12:00 AM
ADDED : டிச 06, 2024 08:50 AM
உடுமலை:
உடுமலை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மாதிரி திறனாய்வுத்தேர்வு நடந்தது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு நடக்கிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மேல்நிலை வகுப்பு முடியும் வரை மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உடுமலை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இத்தேர்வுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. இத்தேர்வுக்கான மாதிரி தேர்வு மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது.
தொடர்ந்து, கிளுவன்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சந்திரசேகர், கணிதம் சார்ந்த பாடங்களை நடத்தினார். மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சுப்ரமணியம் சமூக அறிவியல் பாடமும், வாளவாடி அரசு பள்ளி ஆசிரியர் கவிதா பயிற்சி அளித்தார்.
பயிற்சியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வகுப்புகளை ஆசிரியர் செல்லதுரை, ஈஸ்வரசாமி ஒருங்கிணைத்தனர்.