வங்கதேசத்தில் இருந்து 6,700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்பு
வங்கதேசத்தில் இருந்து 6,700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மீட்பு
UPDATED : ஜூலை 27, 2024 12:00 AM
ADDED : ஜூலை 27, 2024 09:36 AM
புதுடில்லி:
வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து 6,700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக, மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது இயல்பு நிலை படிபடியாக திரும்பி வருகிறது.
இது தொடர்பாக, செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
வங்கதேசத்தில் இருந்து 6,700க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பல்வேறு போக்குவரத்து மூலம் நாடு திரும்பியுள்ளனர்.
வங்கதேச அரசிடம் இருந்து எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பு கிடைத்தது. அண்டை நாடுகளுடன் மிகவும் அன்பான மற்றும் நட்பான உறவைப் பகிர்ந்து கொள்கிறோம். வங்கதேசத்தில் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

