தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மவுண்ட்பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளி ஸ்காலர்ஷிப் தகுதித்தேர்வு மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

மவுண்ட்பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளி ஸ்காலர்ஷிப் தகுதித்தேர்வு மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

மவுண்ட்பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளி ஸ்காலர்ஷிப் தகுதித்தேர்வு மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு


UPDATED : மார் 09, 2026 12:01 PM

ADDED : மார் 09, 2026 12:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 09, 2026 12:01 PM ADDED : மார் 09, 2026 12:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தியாகதுருகம்:
தியாகதுருகம் மவுண்ட்பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கையில் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான தகுதித்தேர்வு நேற்று நடந்தது.

தியாகதுருகம் மவுண்ட்பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கையில் 100 சதவீதம் கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதற்கான ஸ்காலர்ஷிப் தகுதித்தேர்வு சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது.

தாளாளர் மணிமாறன் தேர்வை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். 60 நிமிடங்கள் நடந்த இத்தேர்வில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள 200 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தகுதித்தேர்வினை எழுதினர்.

ஸ்காலர்ஷிப் தகுதித்தேர்வு மற்றும் பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 100 சதவீத கட்டண சலுகை பிளஸ் 1 சேர்க்கையில் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வில் பங்கேற்க ஏதுவாக பல்வேறு ஊர்களில் இருந்து இலவச பஸ் இயக்கப்பட்டது. தேர்வு முடிந்ததும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us