கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் திறன் மேம்பாட்டு மையம்
கலைஞர் கருணாநிதி கல்லுாரியில் திறன் மேம்பாட்டு மையம்
UPDATED : மார் 09, 2026 12:02 PM
ADDED : மார் 09, 2026 12:03 PM
கோவை:
கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, சிஸ்கோ சென்டர் ஆப் எக்சலன்ஸ் நெட்வொர்க்கிங் அகாடமி திறக்கப்பட்டது.
இந்த மையத்தை சிஸ்கோ நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய திறன், வேலைவாய்ப்பு மற்றும் கூட்டாண்மை பிரிவு தலைவர் அனுராக் ஸ்ரீவஸ்தவா திறந்து வைத்தார்.
இந்த மையம், மாணவர்களுக்கு தொழில் துறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட உயர்தர பயிற்சி சூழலை வழங்கும். இதில் மேம்பட்ட நெட்வொர்க்கிங், சைபர் பாதுகாப்பு, கிளவுட் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு போன்ற துறைகளில் மாணவர்கள் நடைமுறை அனுபவத்துடன் பயிலும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
இந்த முயற்சியின் மூலம், கே.ஐ.டி. கல்லுாரி கல்வி மற்றும் தொழில் துறைகளுக்கிடையிலான இணைப்பை வலுப்படுத்தி, எதிர்கால டிஜிட்டல் உலகிற்கு தேவையான திறமையான பொறியாளர்களை உருவாக்கும் தனது உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்தியுள்ளது.

