தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள்: 15 ஆண்டுகளாக தொடரும் அவலம்

ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள்: 15 ஆண்டுகளாக தொடரும் அவலம்

ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள்: 15 ஆண்டுகளாக தொடரும் அவலம்


UPDATED : அக் 05, 2026 02:04 PM

ADDED : அக் 05, 2026 02:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 02:04 PM ADDED : அக் 05, 2026 02:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், 15 ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே வளாகத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மனிதவளம் வீணடிப்பு

இது குறித்து, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், பல்வேறு மாவட்டங்களில், ஒரே வளாகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

வேலுார் கல்வி மாவட்டத்தில் எட்டு பள்ளிகள்; தஞ்சாவூரில் ஐந்து; கள்ளக்குறிச்சியில் மூன்று; ஓசூரில் மூன்று உட்பட, மொத்தம் 25க்கும் அதிகமான அரசு பள்ளிகள், பல்வேறு கல்வி மாவட்டங்களில் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன.

இதன் காரணமாக, ஒரே வளாகத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஒரு புறம், அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், மற்றொரு புறம், 15 ஆண்டுகளாக, ஒரே வளாகத்தில் ஏராளமான பள்ளிகள் இயங்குவதால், மனிதவளம் வீணடிக்கப்படுகிறது.

தகவல்


இது போன்ற பள்ளிகள், புனரமைப்பு பணி காரணமாக, அருகாமையில் உள்ள இடங்களுக்கு கடந்த ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளன. ஆனால், புனரமைப்பு பணிகள் முடிந்ததும், அவை மாற்றப்படாமல், அதே வளாகத்தில் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரே வளாகத்தில், குறைவான மாணவர்கள் எண்ணிக்கையுடன் இயங்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை, ஒரே பள்ளிகளாக மாற்றி, நிர்வாகக் கட்டமைப்பை தமிழக அரசு சீர்செய்ய வேண்டும். மனிதவளத்தை வீணடிக்காமல், தேவையான இடங்களுக்கு அவற்றை கொண்டு சேர்க்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வட்டாரங்கள் கூறின.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us